ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கிடைத்துள்ள கவுரவமும் எதிர்ப்பும்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர், ஐரோப்பிய கமிஷனின் அடுத்த தலைவராக பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், அவருடைய கூட்டணிக் கட்சியினரே அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரஸ்ஸல்சில் பிறந்த Ursula von der Leyenஐ, 28 ஐரோப்பிய தலைவர்கள், Jean-Claude Junckerக்கு அடுத்து, ஐரோப்பிய கமிஷனின் தலைவராக பரிந்துரை செய்துள்ள செய்தி வெளியான மறு கணமே, அவரது கூட்டணிக்கட்சியான SPD கட்சியினர் அவரை ஏளனம் செய்தனர்.

SPD தலைவர்கள், Ursula, ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் நின்றதே இல்லை என்றும், அதனால் அவரை தேர்வு செய்வது ஒப்புக்கொள்ளும் விதமாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

அவரை ஐரோப்பிய கமிஷனின் தலைவராக தேர்வு செய்வது கேலிக்குரியதாக பார்க்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஏஞ்சலா மெர்க்கலின் பவேரிய கூட்டணிக்கட்சியான CSU கட்சியின் தலைவரான Markus Söderம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இது போதாதென்று ஏஞ்சலா மெர்க்கலில் CDU கட்சிக்குளேயே, பதவிக்கு ஆசைப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒரு தோல்வியாளரான அமைச்சருக்கு இப்படி ஒரு பதவி உயர்வை அளிப்பது, சேன்ஸலரின் வெளிநாட்டுக் கொள்கையில் மற்றொரு தோல்வி ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக அமையும் என கட்சியின் கன்சர்வேட்டிவ் பிரிவினர் விமர்சித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers