சீக்கியர்களும் ஹெல்மட் அணிய வேண்டும்: ஜேர்மன் நீதிமன்றம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தலையில் டர்பன் அணிந்துள்ளதால் ஹெல்மட் அணிவது கடினம் என வாதிட்ட சீக்கியரது வாதத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று, சீக்கியர்களும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்றும், மத அடிப்படையில் அந்த விதியிலிருந்து விலக்களிக்க முடியாது என்றும் ஜேர்மனியின் ஐந்து உச்ச நீதிமன்றங்களில் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

Leipzigஇலுள்ள ஃபெடரல் நிர்வாக நீதிமன்றம் ஒன்று, ஹெல்மட் தனது டர்பன் அணிந்த தலைக்கு பொருந்தாது என வாதாடிய ஒரு சீக்கியரின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது.

ஏற்கனவே Constanceஇலுள்ள கீழ் நீதிமன்றம் ஒன்று, வாதிக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவருக்கு ஒரு காரும் ஒரு வேனும் இருப்பதாகவும் கண்டறிந்து அவர் மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டுமானால் கட்டாயம் ஹெல்மட் அணிந்தே ஆக வேண்டும் என்று அளித்திருந்த தீர்ப்பு சரியானதே என நேற்றைய ஃபெடரல் நிர்வாக நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்தது.

Leipzig நீதிமன்றம் சார்பில், ஹெல்மட் கட்டாயம் அணியவேண்டியதன் அவசியம், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவரை மட்டுமல்லாது, விபத்தை ஏற்படுத்தும் மற்ற வாகனம் ஓட்டுவோர், ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவோருக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தி விடுவோமோ என்னும் அதீத பயத்தையும் ஏற்படுத்துவதிலிருந்தும் காப்பாற்றும் என்று வாதிடப்பட்டது.

அதே போல் ஹெல்மட் அணிந்து வாகனம் ஓட்டும் ஒருவர், விபத்து நடந்த இடத்தில் மற்றவர்களுக்கு உதவவும் கூடும் என்றும் Leipzig நீதிமன்றம் வாதிட்டது.

ஆனால் பிரித்தானியா மற்றும் கனடாவின் பல மாகாணங்களிலும் மோட்டார் சைக்கிள் ஓட்டும் சீக்கியர்களுக்கு ஹெல்மட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்