பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு: உலகுக்கே முன்னோடியாகுமா ஜேர்மனி?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் புதுமை முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜேர்மனி, உலகுக்கே முன்னோடியாகும் வாய்ப்பு உள்ளது.

ஜேர்மனியின் Dresdenக்கு அருகிலுள்ள Rossendorfஇல் தனது இயந்திரத்தை நிறுவியுள்ள Oliver Riedel (43) என்னும் ஜேர்மானியர், தனது பணியை நேசித்து செய்கிறார்.

பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப்பின் Oliver Riedel கண்டுபிடித்துள்ள இயந்திரம், நாளொன்றிற்கு 250 கிலோ பிளாஸ்டிக் கழிவை எரிபொருளாக மாற்றுகிறது.

ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவிலிருந்து கிட்டத்தட்ட ஒரு லிற்றர் எரிபொருள் தயாரிக்கலாம் என்கிறார் Oliver Riedel.

ஜேர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகுவதாக தெரிவிக்கும் Riedel, இன்றைய சூழலுக்கு தனது தயாரிப்பு ஜேர்மனிக்கு மிகவும் அவசியமான ஒன்று என்கிறார்.

ஜேர்மனியில் 1950க்கும் 2015க்கும் இடையில் மட்டுமே 8.3 பில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவு உருவாகியுள்ளது. அதில் பத்தில் ஒரு பங்கு கூட மறு சுழற்சி செய்யப்படவில்லை.

2016ஆம் ஆண்டின் கணக்குப்படி, உலகின் மொத்த பிளாஸ்டிக் கழிவில் ஒவ்வொரு ஜேர்மானியரும் ஆளுக்கு 38 கிலோ பிளாஸ்டிக் கழிவை தங்கள் பங்குக்கு அளித்துள்ளார்கள்.

Riedelக்கு ஒரு ஆசை, பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்துள்ள கடற்கரைகளில் அந்தந்த பகுதியிலுள்ள ஹொட்டல்கள் அல்லது அதிகாரிகள் மறுசுழற்சி இயந்திரங்களை செய்து தரவேண்டும்.

சுற்றுலாப்பயணிகளும், உள்ளூர் மக்களும், மீனவர்களும் அந்த இயந்திரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அந்த இயந்திரங்களில் போட்டுவிட்டு, அதற்கு பதில் பணம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது.

மீனவர்கள் தங்கள் படகுகளில் பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றும் இயந்திரத்தை பொருத்திக் கொள்ளலாம்.

அப்புறமாவது மக்களுக்கு கடற்கரைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் என்கிறார் Riedel.

பிளாஸ்டிக் பிரச்சினை இருக்கும் பல தீவுகளில் எரிபொருள் பிரச்சினையும் இருப்பதாக தெரிவிக்கும் Riedel, பிளாஸ்டிக் பிரச்சினையைக் கொண்டு எரிபொருள் பிரச்சினையை தீர்க்க ஆலோசனை கூறுகிறார்.

Riedel கண்டுபிடித்துள்ள எரிபொருள், கிட்டத்தட்ட டீசல் போலவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Riedel சொல்வதுபோலவே, பிளாஸ்டிக்கை எல்லாம் எரிபொருளாக மாற்றினால் நிச்சயம் உலகம் முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பிரச்சினையை தீர்த்து விடலாம் என்றே தோன்றுகிறது.

ஏனென்றால் தனது திட்டத்தை வெறுமனே ஜேர்மனியோடு நிறுத்திவிடாமல், அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, கொரியா, துருக்கி ஆகிய நாடுகளிலும் தனது திட்டத்தை தொடங்க இருப்பதோடு, மேலும் 35 நாடுகளுடனும் தொடர்பு கொண்டு வருகிறார் Riedel.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்