18,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ஜேர்மன் வங்கி: பிரித்தானியர்களுக்கு கடும் பாதிப்பாம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் வங்கி ஒன்று 18,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளநிலையில், அதிகம் பாதிக்கப்பட இருப்பவர்கள் பிரித்தானியர்கள் என செய்திவெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் ஃப்ராங்க்பர்ட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கியானDeutsche Bank, தனது ஊழியர்களில் 18,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

2022க்குள் 18,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள Deutsche Bank, தனது வணிக பிரிவான முதலீட்டு வங்கிப்பிரிவை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன் மூலம் நிலையான வருவாயை பெறமுடியும் என்றும் அறிவித்துள்ளது.

ஒரு புறம் நிலையான வருமானம் பெறுவதற்காக நல்ல கார்பரேட் முதலீட்டாளர்களை பெறத்திட்டமிட்டுள்ள அதே நேரத்தில், அனாவசிய செலவுகளை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது இந்த வங்கி.

கடந்த சில ஆண்டுகளாகவே ஒழுங்குமுறை அபராதம், பலவீனமான இலாபம், அதிக செலவீனங்கள் மற்றும் பங்கு விலை வீழ்ச்சியுடன் இந்த வங்கி போராடி வருகிறது.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக லாபமின்றி இயங்கி வந்த வங்கி, 2018ம் ஆண்டில் மட்டும் 341 மில்லியன் யூரோக்களை நேர்மறையான வருவாயை பதிவு செய்தது.

இந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக Christian Sewing பொறுப்பேற்ற பின்னர், வங்கியின் விரைவான மறுசீரமைப்புக்கு உறுதியளித்துள்ளார்.

ஒரு புறம் பல கட்டமாக ஆராய்ந்தே இந்த வங்கி இந்த முடிவை எடுத்திருத்திருப்பதாகவும், அதிலும் தனது போட்டியாளரான காமர்ஸ் வங்கியுடான இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த பின்னரே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் பிரித்தானியாவில் மட்டும் 8,000 பேரை பணியமர்த்தியுள்ள இந்த வங்கியின் நடவடிக்கையால், அவர்களில் லண்டன் அலுவலகங்களில் பணி செய்யும் பலர் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...