பிரபல ஜேர்மன் பட தயாரிப்பாளர் 100ஆவது வயதில் மரணம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

யூரோப்பா, யூரோப்பா’ போன்ற புகழ் பெற்ற ஜேர்மன் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் தனது 100ஆவது வயதில் உயிரிழந்தார்.

யுத்தத்திற்கு பிந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த வெற்றிப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான Artur Brauner, தனது நூறாவது வயதில் பெர்லினில் காலமானார்.

போலந்தில் பிறந்த யூதரான Brauner, வெள்ளித்திரை மற்றும் தொலைக்காட்சிக்காக 500 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளார்.

அவற்றில் நாஸி கால கட்டத்தைக் காட்டும் ’யூரோப்பா, யூரோப்பா’ என்ற படம் மிகவும் பிரபலமானதாகும்.

ஜேர்மனியில் கலாச்சாரத்துறை அமைச்சரான Grütters கூறும்போது, ஜேர்மனி, இளைய ஃபெடரல் குடியரசு கால கட்ட தயாரிப்பாளர்களில் மிக முக்கியமான ஒருவரை இழந்து விட்டது என்றார்.

1918இல் Lodzஇல் பிறந்த மர வியாபாரி ஒருவரின் மகனான Brauner, சோவியத் யூனியனில் மறைந்து கொண்டதால் நாஸிக்களிடமிருந்து தப்பினார்.

Braunerஇன் குடும்பத்தில் 49பேர் நாஸிக்களால் கொல்லப்பட்ட நிலையில், Lodzஇன் 250,000 யூதர்களில் தப்பிப் பிழைத்த 800 பேரில் Braunerம் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்