நிர்வாணமாக முகம் சிதைத்து கொல்லப்பட்ட ஜேர்மன் பெண்: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு

Report Print Vijay Amburore in ஜேர்மனி

தாய்லாந்தில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஜேர்மன் பெண் விவகாரத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தாய்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜெர்மனியை சேர்ந்த Miriam Beelte (26) என்கிற இளம்பெண், ஏப்ரல் 7ம் திகதியன்று மாலை 6 மணியளவில் கோ சி சிங் பகுதியில் உள்ள தீவில், நிர்வாணமாக இரு சிறிய பாறைகளுக்கு நடுவில் கண்டெடுக்கப்பட்டார்.

அவருடைய உடல் முழுவதும் ரத்தக்கறைகள் படிந்தவாறு, அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் சிதைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட போது, ரொனால்னன் ரோமுருன் (24) என்கிற இளைஞர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையானது இன்று நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது குற்றவாளி தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டான்.

இதனை கேட்டறிந்த நீதிபதி, 'குற்றம் மிகவும் கடுமையானது, குறைக்கப்பட்ட தண்டனை சாத்தியமில்லை' எனக்கூறி மரண தண்டனை விதித்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...