மர்மமாக நடுங்கும் அதிபர்.. என்ன பிரச்சனை? மெர்க்கலுக்கு ஆதரவாக களமிறங்கிய ஜேர்மனியர்கள்

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கலின் கட்டுப்படுத்த முடியாத நடுக்கம் ஒரு தனிப்பட்ட விஷயம் என்று கிட்டத்தட்ட 60 சதவீத ஜேர்மனியர்கள் கருதுகின்றனர்.

சுமார் 14 ஆண்டுகளாக ஜேர்மன் அரசாங்கத்தின் தலைவராக உள்ள மெர்க்கெல் தனது 65 வது பிறந்த அடுத்த புதன்கிழமை கொண்டாடவுள்ளார். அவர், கடந்த மாதத்தில் மூன்று முறை பொதுவில் நடுங்கிய படி காணப்பட்டார்.

ஆக்ஸ்பர்கர் ஆல்ஜெமினென் செய்தித்தாளில் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், கேள்விக்குட்பட்டவர்களில் 59 சதவீதம் பேர், நடுக்கம் மெர்க்கெலின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியது என்றும், 34 சதவீதம் பேர் இது பொது நலனுக்கான விஷயம் என்றும் கூறியுள்ளனர்.

இது அதிபர் தனிப்பட்ட பிரச்சனை என்று பெரும்பான்மையான சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் சேர்ந்து மெர்க்கலின் பழமைவாத சி.டி.யு கட்சியை சேர்ந்தவர்கள் பெரும்பாலோர் மெர்க்கலை ஆதரித்துள்ளனர். தீவிர வலதுசாரி ஏ.எஃப்.டி கட்சியை ஆதரிப்பவர்களில் பெரும்பாலோர் மட்டுமே மெர்க்கலின் உடல்நலம் பொது நலனுக்கான விஷயம் என்று உணர்ந்தனர்.

இந்த வாரம் டென்மார்க்கின் புதிய பிரதமருடனான ஒரு விழாவின் போது, தான் மிகச் சிறப்பாக இருப்பதாக ஜேர்மனி அதிபர் மெர்க்கல் தெவித்தார்.ஜூன் 18 அன்று உக்ரேனிய அதிபர் வோலோடிமைர் ஜெலென்ஸ்கியுடனான ஒரு விழாவின் போது தனக்கு முதல் முறையாக நடுக்கம் ஏற்பட்டதாக மெர்க்கெல் கூறியுள்ளார்.

முதல் நடுக்கத்தை தொடர்ந்து மெர்க்கல் முழு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில், பெர்லனில் நிலவிய வெப்பத்தினால் ஏற்பட்ட நீரிழப்பு காரணமாக நடுக்கம் எற்பட்டதாக ஜேர்மனியின் பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers