ஜேர்மன் சேன்ஸலரின் உடல் நலம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்: ஆய்வு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெரும்பாலான ஜேர்மானியர்கள், ஜேர்மன் சேன்ஸலரின் உடல் நடுக்கம் அவரது தனிப்பட்ட விடயம் என்று கருதுகிறார்கள் என ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

சமீப காலமாக பொது நிகழ்ச்சிகளுன்போது ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் உடல் கடுமையாக கட்டுப்பாடாற்று நடுங்கிய நிலையில், அவர் முன்கூட்டியே பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு விலக வேண்டும் என அரசியல் வட்டாரத்தில் குரல்கள் ஒலிக்கத் துவங்கின.

ஆனால் ஜேர்மன் மக்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த ஆய்வின்படி, சுமார் 60 சதவிகிதம் ஜேர்மானியர்கள், ஏஞ்சலா மெர்க்கலின் உடல் நலம் என்பது அவரது தனிப்பட்ட விடயம் என்று கருதுவது தெரியவந்துள்ளது. சரியாக சொல்ல வேண்டுமானால் 59 சதவிகிதத்தினர் அவரது உடல் நடுக்கம் அவரது தனிப்பட்ட விடயம் என்றும், 34 சதவிகிதத்தினர் அது பொது விடயம் என்றும் தெரிவித்துள்ளனர்.

வலது சாரிக் கட்சியான AfD கட்சியை ஆதரிப்பவர்களில் பெரும்பலானோர் மட்டுமே அவரது உடல் நலம் என்பது பொது விடயம் என்கிறார்கள் என்றும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அடுத்த புதன் கிழமை தனது 65ஆவது பிறந்த நாளைக்கொண்டாடும் ஏஞ்சலா மெர்க்கல் ஜேர்மன் அரசின் தலைவராக சுமார் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இதற்கு முன் உடல் நல பிரச்சினைகள் எதுவும் அவருக்கு இருப்பதாக தெரியாத நிலையில், சமீப காலமாக அவரது உடல் அதிகமாக நடுங்க ஆரம்பித்தது.

இதற்கிடையில் ஏஞ்சலா மெர்க்கல் தனது உடல் நலம் குறித்து அறிய, பல மருத்துவ ஆய்வுகளுக்கு உட்பட்டிருப்பதாக பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers