புலம்பெயர்ந்தவரை காப்பாற்ற பொலிசாருடன் மோதிய ஜேர்மானியர்கள்: ஒரு ஆச்சரிய நிகழ்வு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

புலம்பெயர்ந்தோரால்தான் ஜேர்மனிக்கே பிரச்சினை என பல குரல்கள் பலத்து ஒலிக்கும் ஜேர்மனியில், ஒரு புலம்பெயர்ந்தவரை நாடு கடத்த விடாமல் ஜேர்மானியர்கள் தடுத்து போராடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னொருமுறை Leipzig நகரில் புலம்பெயர்ந்தோர் தொடர்பில் ஏற்பட்ட ஒரு மோதல் அரசியல் பிரச்சினையாகிய நிலையில், அதே of Leipzig நகரில் ஒரு புலம்பெயர்ந்தவரை நாடு கடத்துவதற்காக பொலிசார் வந்தபோது ஜேர்மானியர்கள் பொலிசாருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினார்கள்.

வன்முறையிலும் இறங்கிய சுமார் 500 பேர் கொண்ட அந்த கூட்டம், எங்கள் அயலகத்தாரை திருடாதே என்று குரல் எழுப்பியதோடு, கற்களையும் பாட்டில்களையும் பொலிசார் மீது வீசியது.

இதில் 11 பொலிஸ் அதிகாரிகளுக்கு லேசாக காயம் ஏற்பட்டதோடு வாகனங்களும் சேதமடைந்தன.

என்றாலும், சிரிய குர்திஷ் இனத்தவர் என்று கருதப்படும் அந்த புலம்பெயர்ந்தவர் நாடு கடத்தப்பட்டார்.

பெயர் வெளியிடப்படாத அந்த புலம்பெயர்ந்தவர் அப்பகுதி மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்