உலகின் முக்கிய நகரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விமான சேவைகள் அதிரடி ரத்து: வெளியான தகவலின் பின்னணி

Report Print Arbin Arbin in ஜேர்மனி

எகிப்திய தலைநகர் கெய்ரோவுக்கு செல்லும் அனைத்து விமான சேவைகளையும் திடீரென்று லுஃப்தான்சா மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனங்கள் ரத்து செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜேர்மனியின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான லுஃப்தான்சா Munich மற்றும் Frankfurt நகரங்களில் இருந்து கெய்ரோவுக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் திடீரென்று ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

விமானங்கள் மீது தீவிரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் வெளியான நிலையிலேயே, லுஃப்தான்சா நிறுவனம் இந்த அதிரடி முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதால் லுஃப்தான்சா இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் லுஃப்தான்சா நிற்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் லண்டனில் இருந்து கெய்ரோ செல்லும் அனைத்து விமானங்களையும் அடுத்த 7 நாட்களுக்கு ரத்து செய்வதாக அறிவித்த நிலையில், லுஃப்தான்சா நிறுவனமும் தங்கள் விமான சேவையை பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதனிடையே மூன்று எகிப்திய விமான நிலையங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பிரித்தானிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட தகவல்கள் வெளியானது.

அதன் தொடர்ச்சியாகவே பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, விமான சேவையை சீர்குலைக்கும் தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும்,

எகிப்தில் இருந்து பிரித்தானியா புறப்படும் விமானங்களுக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers