இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் செய்த சர்ச்சைக்குரிய செயல்: பதவியிழக்கும் அபாயம்?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் இந்தியாவில் சர்ச்சைக்குரிய ஒரு அமைப்பை சந்தித்ததையடுத்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியாவுக்கு சென்றிருந்த இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் Walter J Lindner, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் என்ற அமைப்பின் தலைமையகத்திற்கு சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அமைப்பு ஹிட்லரையும் அவரது கலாச்சார தேசியவாத கருத்துக்களையும் புகழும் அமைப்பு என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

எனவே இந்த சர்ச்சைக்குரிய சந்திப்பை எதிர்த்து Pieter Friedrich என்னும் தெற்காசிய விவகாரங்கள் பகுப்பாய்வாளர், Lindner ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி ஒன்லைன் புகார் ஒன்றை துவக்கியுள்ளார்.

அந்த ஒன்லைன் புகார், ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலும், வெளியுறவு அமைச்சர் Heiko Maasம் இந்த விடயத்தில் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளது.

இந்நிலையில் நான் அந்த அமைப்பைக் குறித்து நேர் மறையாகவும், எதிர்மறையாகவும் பல விடயங்களைக் கேள்விப்பட்டுள்ளேன், அவற்றை தெளிவுபடுத்திக் கொள்வதற்காகவே அந்த அமைப்பின் தலைவரை சந்தித்து விளக்கங்கள் கேட்டேன் என்று தெரிவித்துள்ளார் Lindner.

அதேபோல், இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலரான Lalit Mansinghம், ஒரு தூதர் தான் சந்திக்க விரும்பும் எத்தனைபேரை வேண்டுமானாலும் சந்திக்கலாம் என Lindnerக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில், ஜேர்மனி, இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளர் மட்டுமல்ல, இரு நாடுகளும் தங்களுக்குள் சுமூக தூதரக உறவுகளைக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்