ஜேர்மனியில் வாட்டி வதைக்கும் வெயில்: அரசியல் கட்சி ஒன்று முன் வைத்துள்ள அருமையான யோசனை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கிரீன்ஸ் கட்சியினர் அவரவர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே வேலை பார்க்கலாம் என்னும் யோசனையை முன்வைத்துள்ளனர்.

இனி சாதாரண வெப்பநிலையே 50 டிகிரி செல்ஷியஸ் ஆகத்தான் இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், அதை தாக்குப்பிடிப்பதற்காக அரசு, மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அக்கட்சி கூறியுள்ளது.

அத்துடன் வெயில் அதிகமாகும்போது அதிலிருந்து தப்புவதற்காக பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் வெயில் விடுமுறைகள் அளிக்க வேண்டும் என்றும் அக்கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

கிரீன்ஸ் நாடாளுமன்றக் குழுவின் தலைவரான Anton Hofreiterம், கட்சியின் சுற்றுச்சூழல் நிபுணரான Bettina Hoffmannம், தங்கள் வெயில் நடவடிக்கை திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டாயம் பணிக்காக வீட்டை விட்டு வெளியே இறங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உடையவர்களைத் தவிர, மற்றவர்கள் வீட்டிலிருந்த வண்ணமே பணி புரியும் திட்டத்தை செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதீத வெயிலின் காரணமாக Brandenburgஇலுள்ள Jüterborg நகரில் காட்டுத்தீ ஏற்பட்டு, 50 முதல் 100 ஹெக்டேர்கள் வரை பற்றியெரியும் நிலை காணப்படுவதையடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு ஜேர்மனியின் Lingen நகரில், நேற்று முன்தினம், முதன்முறையாக வெப்பநிலை 42.6 டிகிரி செல்ஷியசை எட்டியுள்ளதே, அதிகபட்ச வெப்பநிலையாக கருதப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers