ஜேர்மனியில் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் பேரணி!

Report Print Kabilan in ஜேர்மனி

ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஆதரவு கோரி ஜேர்மனியில் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்றனர்.

ஜேர்மனியின் சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல், அந்நாட்டில் ஓரினச்சேர்க்கை திருமணங்களை அனுமதிக்க கூடாது என்று உறுதியாக உள்ளார்.

ஆனால், அவரது கட்சியினரே ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், விரைவில் இந்த சட்டம் அமலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் ஆயிரக்கணக்கானோர் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் வானவில்லின் நிறக்கொடியுடன் ஆடைகளை அணிந்தும், பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகள் போன்று வேடமிட்டும் ஏராளமானோர் பேரணியில் பங்கேற்றனர்.

அப்போது தன்பாலின கொள்கைக்கு ஆதரவளிப்பதன் மூலம் பாலியல் ரீதியான குற்றங்கள் குறையும் என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும், ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக வெளிப்படையான பேரணி நடந்து 50வது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இந்த ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளதாக பேரணியில் பங்கேற்றவர்கள் குறிப்பிட்டனர்.

ஏற்கனவே பிரான்ஸ், பிரித்தானியா, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஓரினச்சேர்க்கை திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கியுள்ள நிலையில், ஜேர்மனி நாடாளுமன்றத்தில் ஓரினச் சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers