பிரித்தானியா பிரான்சுடன் இணைய மறுப்பு தெரிவித்த ஜேர்மனி: அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெர்சிய வளைகுடா பகுதியில், கப்பல்களை ஈரான் கைப்பற்றுவதிலிருந்து பாதுகாப்பதற்காக போர்க்கப்பல்களை அனுப்பும்படி அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஜேர்மனி நிராகரித்துள்ளது.

ஜேர்மனியின் துணை சேன்ஸலரான Olaf Scholz, அமெரிக்கா தலைமையிலான கடல் பாதுகாப்பு படையில் தமது நாடு பங்கேற்பதில்லை என்று வெளிப்படையாகவே நேற்று அறிவித்து விட்டார்.

இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து நமது பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய கூட்டாளிகளுடன் பேச விரும்புகிறோம், ஆனால் கோரப்பட்ட கடல் பாதுகாப்பு குறித்து விவாதிக்க விரும்பவில்லை என்றார் Scholz.

கடந்த மாதம் பிரித்தானிய எண்ணெய்க்கப்பலான ஸ்டெனோ இம்பீரோ ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் இணையுமாறு ஜேர்மனிக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வந்தது.

அந்த பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஏற்கனவே பிரித்தானிய கடற்படை பாதுகாப்பு கொடுக்க தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வளைகுடா பகுதியில் பதற்றம் ஏற்படுவதை தவிர்ப்பதே ஜேர்மனியின் முக்கிய நோக்கம் என்றார் Scholz.

ஜேர்மனியும் வளைகுடா பகுதிக்கு போர்க்கப்பல்களை அனுப்புமானால், அங்கு உண்மையாகவே மோசமான ராணுவ ரீதியிலான பிரச்சினைகள்தான் ஏற்படும் என்று கூறிய அவர், பிறகு அந்த பகுதியில் கப்பல் போக்குவரத்தே கடினமானதாகிவிடும் என்றார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers