ஜேர்மனியின் பாதுகாப்பான நகரில் நடந்த படுகொலை.. பொலிசார் எடுத்த துரித நடவடிக்கை!

Report Print Kabilan in ஜேர்மனி
257Shares

ஜேர்மனியின் Stuttgart நகரில் வாள் போன்ற ஆயுதத்தால் நபர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தெற்கு ஜேர்மனியின் மாநிலமான Baden-Wurttembergயின் தலைநகரம் Stuttgart. பல ஜேர்மனிய நிறுவனங்களின் தலைமையிடமாக அமைந்துள்ள Stuttgart, ஜேர்மனியின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்நிலையில், Stuttgart நகரின் Fasanenhof என்ற பகுதியில், 36 வயதுடைய நபர் ஒருவர் பகல்வேளையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். வாள் போன்ற ஆயுதமாக அது இருந்தாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், கொலை செய்யப்பட்டவர் ஒரு ஜேர்மன் கசாக் என்று கூறப்படுகிறது.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர் சைக்கிளில் தப்பியோடியுள்ளார். எனினும், பரவலான தேடலுக்கு பின்னர் பொலிசார் அவரை கைது செய்தனர். ஆனால், அவரது அடையாளங்களை பொலிசாரால் உறுதிபடுத்த முடியாத நிலையில், சந்தேக நபர் ஒரு பாலஸ்தீனியராக இருக்கலாம் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் 2015ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் வசித்து வரும் சிரிய குடிமகன் என்று பொலிசார் ஆரம்பத்தில் தெரிவித்தனர். இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், வீடியோவை பதிவு செய்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

ஆனால், ஜேர்மனிய சட்டத்தின்படி இது தவறு என்பதால், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்