ஜேர்மன் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்த சிங்கத்தின் செயல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் உயிரியல் பூங்காவில் அழகான இரண்டு குட்டிகளை ஈன்ற சிங்கம் ஒன்றைக் காண, பார்வையாளர்கள் ஆர்வம் காட்டிய நிலையில், யாரும் எதிர்பாராதபோது அந்த பெண் சிங்கம் செய்த செயல் பார்வையாளர்களை முகம் சுளிக்கச் செய்தது.

ஜேர்மனியின் Leipzig உயிரியல் பூங்காவில் உள்ள ஐந்து வயதான Kigali என்ற பெண் சிங்கம், கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு அழகான குட்டிகளை ஈன்றது.

குட்டிகளை ஈன்று மூன்று நாட்களான நிலையில், திங்கட்கிழமை திடீரென அது தனது குட்டிகள் இரண்டையும் விழுங்கி விட்டது.

உயிரியல் பூங்காவிற்கான செய்தி தொடர்பாளர் ஒருவர், அந்த காட்சி தங்களை அதிர்ச்சியடையச் செய்து விட்டதாகவும், அதை விவரிக்க முடியவேயில்லை என்றும் கூறினார்.

ஒரு வேளை குட்டிகளுக்கு உடல் நலம் இல்லையென்றாலோ, அவற்றின் வளர்ச்சியில் பிரச்சினை இருக்கலாம் என்று தாய்க்கு தெரியவந்தாலோ தாய் விலங்கு, குட்டியை விழுங்கிவிடுமாம்.

இந்த குட்டிகளைப் பொருத்தவரையில் இரண்டையுமே Kigali விழுங்கிவிட்டதால், அவற்றிற்கு என்ன பிரச்சினை என்பதை கண்டுபிடிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இன்னொன்று முதல் முறையாக குட்டி போடும் சில விலங்குகள், அவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் விழுங்கி விடும் என்பதால், Kigaliயும் முதல் முறையாக தாயாகியுள்ளதால் குட்டிகளை விழுங்கி விட்டிருக்கலாம் என்கிறார்கள் உயிரியல் பூங்கா ஊழியர்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்