ஜேர்மனியில் அமலுக்கு வரும் புதிய தடை..! அமைச்சர் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் விரைவில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்படும் என அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஸ்வென்ஜா ஷுல்ஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்வென்ஜா ஷுல்ஸ் கூறியதாவது, பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை இயற்ற ஜேர்மனி திட்டமிட்டுள்ளது.

ஏனெனில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சில்லறை விற்பனையாளர்களுடன் போடப்பட்ட தன்னார்வ ஒப்பந்தங்கள் போதுமான பலன்களைத் தரவில்லை.

அதனால், எனது அமைச்சகம் அதன் வழியில் ஒரு பிளாஸ்டிக் பை தடையை பெறும் என்று கூறிய ஸ்வென்ஜா, இத்திட்டத்திற்கான ஒரு கால அட்டவணை பற்றி குறிப்பிடவில்லை.

நாங்கள் ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் சமூகத்திலிருந்து வெளியேறுகிறோம், நாங்கள் குறைந்த பிளாஸ்டிக் பயன்படுத்துவோம் இதுவே எனது நோக்கம் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் ஸ்வென்ஜா ஷுல்ஸ் கூறியுள்ளார்.

2021 முதல் உறிஞ்சு குழாய், முட்கரண்டி மற்றும் கத்திகள் போன்ற சில ஒற்றை-பயன்பாட்டு பிளாஸ்டிக் தயாரிப்புகளை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்துள்ளது, ஆனால், மற்ற நாடுகளுக்கு மாற்றத்தை கொண்டு வர கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ள அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்