அழிவின் விளிம்பில் இருக்கும் பறவைக்காக ஒரு மோதல்: ஜேர்மனியில் ஒரு வித்தியாசமான சம்பவம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களுக்காக விலங்குகள் நல ஆர்வலர்கள் போராடுவதைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு பறவையை கொன்றதற்காக இரண்டு இளைஞர்களை மக்கள் சேர்ந்து அடித்து துவைத்த ஒரு சம்பவம், உண்மையிலேயே இயற்கை மீதான ஆர்வம் கொண்டவர்கள் எந்த அளவுக்கும் துணிந்து செயல்படுவார்கள் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது.

பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு திரும்பிய இரண்டு ஜேர்மானியர்கள் அழிவில் இருக்கும் பறவையான capercaillie என்னும் பறவையை போத்தலால் தாக்கியுள்ளனர். அதில் அந்த அரிய வகை பறவை உயிரிழந்துள்ளது.

போதையிலிருந்த 20 மற்றும் 22 வயதுள்ள அந்த இளைஞர்களின் செயல் கண்டு அதிர்ச்சியுற்ற, சம்பவத்தை நேரில் கண்ட சிலர், அவர்களைப் பிடித்து நையப் புடைத்ததோடு, அவர்கள் மீது மதுபானத்தையும் ஊற்றியுள்ளனர்.

பொலிசார் வரும் வரை அவர்கள் இருவரையும் பிடித்து வைத்திருந்த மக்கள், பொலிசார் வந்ததும் அவர்களை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிசாரிடம் அந்த பறவைகள் தங்களை அச்சுறுத்தியதாகவும், தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவே அவற்றை தாக்கியதாகவும் அந்த இளைஞர்கள் இருவரும் கூறியுள்ளனர்.

ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக, பொலிசார் அந்த இளைஞர்களை தாக்கியவர்களை விசாரித்து வருகிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்