ஒரு காலத்தில் பெருமளவில் போர் விமானங்களை நிறுத்தும் இடமாக திகழ்ந்த விமான நிலையம் ஒன்று, பெர்லினின் சிவப்பு விளக்கு பகுதியாக மாற்றம் செய்யபட உள்ளது.
தற்போது பூங்காவாக செயல்படும் Tempelhof விமான நிலையத்தில், பாலியல் தொழிலாளிகள் தங்கள் வாடிக்கையாளர்களை சந்திக்கும் அறைகளை கட்ட நகர மேயரான Stephan von Dassel, திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
தனது மாகாணத்திலுள்ள சாலையில் நின்று பாலியல் தொழில் செய்யும் பாலியல் தொழிலாளிகள் மற்றும் பெர்லினின் பாலியல் தொழிலாளிகளின் பாதுகாப்பை எப்படி அதிகரிப்பது என்னும் விவாதத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டத்தை Stephan முன்வைத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பெர்லினில் உள்ள பாலியல் தொழிலாளிகளின் தற்போதைய நிலை மனிதத்தன்மையற்ற விதத்தில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையை பெர்லின் மாகாணம் ஏற்றுக்கொள்ளுமானால், அது கட்டாய பாலியல் தொழிலையும், பெண்களுக்கெதிரான வன்முறையையும், அதீத மன அழுத்தத்தால் பெண்கள் போதைக்கு அடிமையாவதையும் ஊக்குவிப்பதற்கு சமம் என்கிறார் அவர்.
எனவே இப்படி பாதுகாப்பான அறைகளை உருவாக்குவது பெண்களுக்கு பாதுகாப்பையும், பாலியல் தொழில் மீதான எதிர்மறை எண்ணத்தையும் குறைக்கும் என்கிறார் Stephan.