550 வருட பழமையான இசைக்குழு மீது வழக்குத் தொடர்ந்த சிறுமி: என்ன காரணம் தெரியுமா?

Report Print Arbin Arbin in ஜேர்மனி

பெண் என்பதால், தன்னை சேர்க்க மறுத்த பழமையான இசைக்குழு மீது 9 வது சிறுமி ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் செயல்பட்டு வருகிறது கதீட்ரல் இசைக்குழு. தேவாலயத்தில் பாடும் இந்த இசைக்குழு தொடங்கி, 554 வருடங்கள் ஆகிறது.

கடந்த 1465 ஆம் ஆண்டு இரண்டாம் பிரடெரிக் தொடங்கிய இசைக்குழு இது. அப்போதிருந்து இப்போது வரை, இந்த இசைக்குழுவில் பெண்கள் இடம்பெற்றதில்லை. ஆண்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 9 வயது சிறுமி ஒருவர், இதில் சேருவதற்காக விண்ணப்பித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் இவருக்கு கலந்தாய்வு நடந்தது.

ஆனால் சிறப்பாக செயல்பட்டும் அவர் அந்தக் குழுவில் சேர்க்கப்படவில்லை. காரணம் விசாரித்தபோது, பெண் என்பதால் சேர்க்கவில்லை என்று இசைக்குழு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சம உரிமை பேசும் காலத்தில் பெண் என்பதால் சேர்க்க மறுத்ததை அடுத்து, அந்த சிறுமி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பதிலளித்த நீதிமன்றம், பெண் என்ற காரணத்தால் அல்ல, ஆனால் அவர் அசாதாரண திறமையை வெளிப்படுத்தினால் கண்டிப்பாக சேர்த்துக் கொள்வார்கள் என பதிலளித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்