ஈராக்கில் சிக்கியிருந்தவர்களில் முதல் குடும்பத்தை வரவேற்ற ஜேர்மனி: சிறப்பம்சம் கொண்ட ஒரு நிகழ்வு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
170Shares

எட்டு பேர் அடங்கிய யாஸிடி இனத்தவர்களின் குடும்பம் ஒன்றை பெர்லின் விமான நிலையத்தில் ஜேர்மன் அதிகாரிகள் வரவேற்ற சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

ஏன் இது ஒரு சிறப்பம்சம் மிக்க நிகழ்வு என்றால், ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கி சித்திரவதை அனுபவித்த யாஸிடி இனத்தவர்களை புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மீட்டு பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் குடியமர்த்தி வருகிறது.

அவ்வகையில் Brandenburg நகரின் புதியதொரு மனிதநேய திட்டத்தின் கீழ் (HAP) ஜேர்மனிக்கு அழைத்து வரப்படும் முதல் குடும்பம் இந்த குடும்பம்தான்.

அந்த குடும்பத்தினரை ஈராக்கின் எர்பில் நகரிலிருந்து ஜேர்மனியின் பெர்லின் நகருக்கு அழைத்து வருவது வரை IOMஇன் ஊழியர்கள் அவர்களுடன் இருந்த நிலையில், அவர்களை Brandenburgஇல் குடியமர்த்துவதற்குமுன் சிறப்பு பயிற்சி பெற்ற அலுவலர்கள் பெர்லின் விமானத்தில் ஆரத்தழுவி வரவேற்றனர்.

ஐ. எஸ் அமைப்பிடம் சிக்கி அளவிலா துன்பம் அனுபவித்த இந்த குழுவினருக்கு தொடர்ந்து உதவுவது மிகவும் அவசியமான ஒன்றாகும் என்று தெரிவித்த IOMஇன் ஈராக் பிரிவு தலைவரான Gerard Waite, Baden-Württembergஐத் தொடர்ந்து மற்றொரு ஜேர்மன் மாகாணமும் யாஸிடிகள் மீண்டும் தங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புவதற்கு உதவ முன் வந்ததற்காக நாங்கள் மிகுந்த நன்றி உடையவர்களாக இருக்கிறோம் என்றார்.

2015க்கும் 2016க்கும் இடையில் 1000 யாஸிடி பெண்களை Baden-Württembergக்கு கொண்டு வர IOM உதவியது.

அவர்களில் 2018ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற Nadia Muradம் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ் அமைப்பினர் ஈராக்கில் வாழ்ந்த யாஸிடி இனத்தவர்களில் ஆயிரக்கணக்கான ஆண்களைக் கொலை செய்ததோடு, ஏராளமான பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் அடிமைகளாக பிடித்து வைத்துக் கொண்டதும் மறக்க இயலாத ஒரு நிகழ்வாகும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்