மீண்டும் 180 கிலோமீற்றர் வேகத்தில் கார் ஓட்டிய குட்டி சாரதி: இம்முறை நடந்த சோகம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சில நாட்களுக்குமுன் 140 கிலோமீற்றர் வேகத்தில் கார் ஓட்டி பொலிசாரிடம் சிக்கிய ஜேர்மன் சிறுவன், மீண்டும் காரை எடுத்துக் கொண்டு சாலையில் இறங்கினான்.

ஜேர்மன் நகரமான Soestஐச் சேர்ந்த அந்த எட்டு வயது சிறுவன், இம்முறை Dortmund என்ற நகர் வரை கார் ஓட்டிச் சென்றுள்ளான்.

நெடுஞ்சாலையில் அவன் 180 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வழக்கம் போல மகனையும் காரையும் காணாமல், அவனது தாய் பொலிசாருக்கு தகவலளிக்க, சிறுவனைத் தேடி பொலிசார் புறப்பட்டனர்.

அவன் சிக்னலையோ போக்குவரத்து விதிகளையோ மதிக்கவில்லை என சக வாகன ஓட்டி தெரிவித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இம்முறை தனது தாயின் வோல்க்ஸ்வேகன் காரை எடுத்துச் சென்ற அந்த சிறுவன், ட்ரக் ஒன்றின் பின்னால் இணைக்கப்பட்டிருந்த ட்ரெய்லரின்மீது மோதியிருக்கிறான்.

அந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், அவன் ஓட்டிச்சென்ற கார் மிக மோசமாக சேதமடைந்துள்ளது.

அந்த சிறுவன் அவனது தாயின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக காரை எடுத்துச் சென்றுள்ள நிலையில், இம்முறை அவனுக்கு மன நல ஆலோசனை கொடுக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்