பெர்லின் பூங்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஜார்ஜியா நாட்டவர்.. ரஷ்ய நபரை கைது செய்த பொலிசார்!

Report Print Kabilan in ஜேர்மனி

ஜார்ஜியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை கொலை செய்ததாக, சந்தேகத்தின் பேரில் ரஷ்ய நபரை ஜேர்மனி பொலிசார் கைது செய்துள்ளனர்.

இரண்டாவது Chechen போரில்(1999-2009) கலந்து கொண்டவர் Zelimkhan(41). ஜார்ஜியாவைச் சேர்ந்த இவர் அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவில் சேர்ந்தார். அந்த பிரிவு, ரஷ்யாவின் தாகெஸ்தான் குடியரசின் எல்லைக்கு அருகில் உள்ள Lopota பள்ளத்தாக்கில், பிணைக் கைதிகளை வைத்திருக்கும் போராளிகளுக்கு எதிராக செயல்பட்டது.

இந்நிலையில், ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள பூங்கா ஒன்றில் Zelimkhan துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலைக் கைப்பற்றிய பொலிசார், விசாரணையைத் தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில், மசூதிக்கு Zelimkhan சென்று கொண்டிருந்தபோது கொலையாளி அவரை பின்னால் இருந்து இருமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்றும், அதன் பின்னர் சைக்கிள் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார் என்றும் தெரிய வந்தது.

சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர், Assassination பாணியில் அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் ரஷ்யாவின் Chechnya குடியரசைச் சேர்ந்த 49 வயது சந்தேக நபரை ஜேர்மனி பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும், Spree நதியில் இருந்து ஒரு க்ளோக் துப்பாக்கி, ஒரு Wig மற்றும் சைக்கிள் ஒன்றை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையில், சந்தேக நபரின் வீட்டில் ஒரு பெரிய தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக Tagesspiegel நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இந்த கொலை பாதிக்கப்பட்டவரின் கடந்த காலத்தில் ராணுவத்துடன் தொடர்புடைய பழிவாங்கும் கொலை என்று நம்பப்படுகிறது என்று ஜேர்மனி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers