ஹெலிகாப்டர்-விமானம் மோதிக்கொண்ட கோர விபத்து.. நான்கு ஜேர்மனியர்கள் பலியானதாக தகவல்!

Report Print Kabilan in ஜேர்மனி

ஸ்பெயின் நாட்டில் ஹெலிகாப்டர் மற்றும் இலகுரக விமானம் நேருக்குநேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஏழு பேர் பலியான நிலையில், அவர்களில் 4 பேர் ஜேர்மனியர்கள் என்று தெரிய வந்துள்ளது.

ஸ்பெயினின் Mallorca தீவில் ஹெலிகாப்டரும், இலகுரக விமானம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 7 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பலியானவர்கள் குறித்த சரியான விபரம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், ஜேர்மனியைச் சேர்ந்த நான்கு பேர் இந்த விபத்தில் பலியாகியுள்ளதாக, ஜேர்மனியின் வெளியுறவு அலுவலகம் தற்போது உறுதிபடுத்தியுள்ளது.

மூனிச் நகரில் இருந்து ஒரு ஜோடி, தங்கள் 9 மற்றும் 11 வயதினையுடைய குழந்தைகளுடன் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர் என்று ஜேர்மனி ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஹெலிகாப்டர் ஜேர்மனியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜேர்மன் நிறுவனமான Rotorflug Helicopters, தங்கள் ஹெலிகாப்டர்களில் ஒன்று தான் விபத்துக்குள்ளாகியிருக்கிறது என்பதை உறுதிபடுத்தியுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியாத நிலையில், அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஸ்பெயின் பிரதமர் Pedro Sanchez தனது இரங்கலை தெரிவித்துள்ளதுடன், Mallorca-வில் இருந்து வந்த செய்தியைக் கேட்டு கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

DPA

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்