ஜேர்மன் நகரில் ஐந்து நாட்களாக ஆட்டம் காட்டிய கொடிய நாகப்பாம்பு சிக்கியது!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் Herne நகரில் மக்களை அச்சத்துக்குள்ளாக்கிய கொடிய நாகப்பாம்பு சிக்கியது.

ஒரு வீட்டின் அடித்தளத்துக்கு செல்லும் வழியில் காணப்பட்ட அந்த பாம்பை, பாம்புகள் பிடிக்கும் நிபுணர் ஒருவர் பிடித்ததாக உள்ளூர் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

நகரவாசி ஒருவர் வளர்த்த நாகப்பாம்பு ஒன்று தப்பி சுற்றித்திரிந்ததையடுத்து, அந்த நகரிலுள்ள 30 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தனர்.

சுமார் 4 அடி நீளமுடைய அந்த விஷப்பாம்பு, அதை வளர்ப்பவரின் வீட்டிலுள்ள படிக்கட்டில் நடமாடுவதை பார்த்து மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள்.

விலங்கு நிபுணர்கள், அந்த வீட்டைச் சுற்றிலும் மாவைக் கொட்டி வைத்தும், ஒட்டும் நாடாக்களை ஆங்காங்கு ஒட்டி வைத்தும் அந்த பாம்பின் நடமாட்டத்தை அறிய முயற்சி செய்து வந்தார்கள்.

இந்நிலையில் ஞாயிறன்று காணாமல்போன அந்த பாம்பு வெள்ளியன்று சிக்கியது. மருத்துவ உதவிக்குழுவினர் பாம்பு கடிக்கான நச்சு முறிவு மருந்துடன் தயார் நிலையில் நிற்க, பாம்பு பிடிப்பவர் பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கினார்.

மேற்கு ஜேர்மன் நகரமாகிய Herneஇல் உள்ள ஒரு வீட்டில், ஒருவர், 20 விஷப்பாம்புகள் வரை வளர்த்து வந்த நிலையில், அவர் வளர்த்த பாம்புகளில் ஒன்று தப்பி மக்களை அச்சத்துக்குள்ளாக்கியதையடுத்து, அந்த நபர் இனி பாம்புகளை வைத்திருக்கக் கூடாதென அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers