பெர்லின் உயிரியல் பூங்காவில் ஒரு கொண்டாட்டம்: காரணம் இதுதான்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெர்லின் உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்துள்ள இரண்டு உயிரினங்களால் பெர்லின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

ஆம், பெர்லின் உயிரியல் பூங்காவில் அபூர்வ வகை பாண்டா கரடி ஒன்று, குட்டிகளை ஈன்றுள்ளதுதான் அதற்கு காரணம்.

பாண்டா கரடிகள் எளிதில் பாலுறவு கொள்வதில்லை. எனவே மொத்த உலகிலும் வெறும் 1,864 பாண்டாக்கள்தான் உள்ளன. இந்நிலையில் பெர்லின் உயிரியல் பூங்காவில் உள்ள Meng Meng என்னும் பாண்டா, இரட்டைக் குழந்தைகளை ஈன்றுள்ளதுதான் கொண்டாட்டத்திற்கு காரணம்.

ஏனென்றால், தங்கள் நாடும் பாண்டாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பங்கேற்றுள்ளதாக ஜேர்மனி மகிழ்கிறது.

முதல் குட்டி பிறந்தவுடன் அதை தன் வயிற்றின்மீது Meng Meng எடுத்து வைத்துக் கொள்ள, அடுத்த ஒரு மணி நேரத்தில் அடுத்த குட்டி பிறந்துள்ளது.

பொதுவாக பாண்டாக்கள் குட்டிகளில் ஒன்றைத்தான் வளர்க்கும்.

ஆனால் இம்முறை Meng Meng இரண்டு குட்டிகளையும் வளர்க்க, ஜேர்மன் விலங்குகள் நல நிபுணர்களோடு சீனாவிலிருந்து வந்துள்ள நிபுணர்களும் உதவுகிறார்கள்.

சீனாவுக்கு இங்கென்ன வேலை? சீன - ஜேர்மன் உறவுகளின் 45ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில், சீனாதான் Meng Meng மற்றும் Jiao Qing என்னும் இரண்டு பாண்டாக்களை ஜேர்மனிக்கு கடனாக கொடுத்துள்ளது.

15 ஆண்டுகளுக்கு அவை ஜேர்மனியில் இருக்கும். அத்துடன் Meng Mengஇன் குட்டிகள் வளர்ந்து தாயை மறந்ததும், அவை சீனாவிடம் ஒப்படைக்கப்படும், அதுவும் இரண்டு நாடுகளுக்கிடையிலான பாண்டா ஒப்பந்தத்தில் அடங்கும்.

இது எல்லோருக்கும் தெரியும்தான், என்றாலும், பெர்லின், பாண்டா குட்டிகள் பிறந்துள்ளதை இப்போதைக்கு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers