பூச்சிகள் இல்லாத ஒரு உலகம் மனிதர்கள் வாழ தகுதியற்றது: சுற்றுச்சூழலுக்காக ஜேர்மனியின் நடவடிக்கை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பூச்சிகள் இல்லாத ஒரு உலகம் மனிதர்கள் வாழ தகுதியற்றது என்று கூறியுள்ள ஜேர்மனி, பூச்சிகளை பாதிக்கும் ஒரு ரசாயனத்தை தடை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

களைக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் முக்கிய ரசாயனமான glyphosateஐ 2023 இறுதியில் நிரந்தரமாக தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஜேர்மன் அரசு நேற்று அறிவித்துள்ளது.

உயிரினங்களை பாதுகாப்பதற்கான இந்த நடவடிக்கைக்குக்கு முதல் அடி எடுத்து வைத்துள்ள ஜேர்மன் சுற்றுச்சூழல் அமைச்சரான Svenja Schulze, பூச்சிகள் இல்லாத ஒரு உலகம் மனிதர்கள் வாழ தகுதியற்றது என்று கூறியுள்ளார்.

ஒரு ரசாயனம் பூச்சிகளை பாதிக்கும் என்றால் அது மனிதர்களையும் பாதிக்கும் என்று மாநாடு ஒன்றில் பேசும்போது கூறிய Schulze, நமக்கு பூச்சிகள் அவசியமானவை என்றார்.

ஏற்கனவே உலக சுகாதார மையம் glyphosate புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என அறிவித்த நிலையில், ஆஸ்திரியா நாடு முன்வந்து முதல் முதலாக அதை தடைசெய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்