திடீரென குலுங்கிய பெர்லின் விமானம்: எட்டு பயணிகள் காயம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெர்லின் நோக்கி வந்து கொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென குலுங்கியதால் அதில் பயணித்த எட்டு பயணிகள் காயமடைந்தனர்.

பெர்லினின் Tegel விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன் அந்த விமானம் திடீரென குலுங்கியதால், எட்டு பேருக்கு காயம் ஏற்பட்டது, ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார்.

இத்தாலியிலிருந்து பெர்லின் வந்துகொண்டிருந்த Eurowings flight EW8855 என்ற விமானம் வான்வெளியில் ஏற்பட்ட Turbulence காரணமாக பயங்கரமாக குலுங்கியது.

9000 மீற்றர் உயரத்தில் விமானம் வரும்போது, அதிக அளவில் மேகமூட்டம் இருப்பதைக் கண்ட விமானி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீட் பெல்ட் அணியும்படி பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக விமான நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் பயணிகள் சீட் பெல்ட் அணிவதற்கு முன்பாகவே விமானம் பயங்கரமாக குலுங்கத் தொடங்க, தவிர்க்க முடியாமல் பயணிகள் காயமடைய நேர்ந்துள்ளது. மாலை சுமார் 5 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது.

உடனடியாக அங்கு வந்த மருத்துவ உதவிக் குழுவினர் காயம்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

ஆறு பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மூன்று விமான ஊழியர்களும் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கும் சிகிச்சை தேவைப்பட்டதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்