குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பயணிக்கும் காரில் புகை பிடிக்க தடை: ஜேர்மனியில் புதிய சட்டம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பயணிக்கும் காரில் புகை பிடிக்க தடைவிதிக்கும் சட்டம் ஒன்றை கொண்டுவர ஜேர்மன் மாகாணம் ஒன்று திட்டமிட்டுள்ளது.

North Rhine-Westphalia மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் இந்த திட்டத்தை முன் வைத்துள்ளதோடு, நாடு முழுவதும் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பயணிக்கும் காரில் புகை பிடிப்பதை குற்றம் என அறிவிக்கும் மசோதா ஒன்றை இன்று முன்வைத்துள்ளனர்.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பயணிக்கும் காரில் புகைபிடிப்பது பொறுப்பற்ற செயல் என்று மாகாண சுகாதாரத்துறை அமைச்சரான Karl-Josef Laumann கூறியுள்ளார்.

வயிற்றிலிருக்கும் குழந்தைகளும், சிறுவர்களும் புகைப்பதால் மறைமுகமாக ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியாது, எனவேதான் இந்த புகை பிடிக்க தடையை கொண்டு வர உள்ளோம் என்றார் அவர்.

மற்றவர்கள் புகை பிடிப்பதால் புகை பிடிக்காமல் அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கும் நுரையீரல் நோய், புற்றுநோய் மற்றும் உடல் உறுப்பு குறைபாடுகள் ஏற்படலாம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ள Laumann, தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள முடியாதவர்களை காப்பாற்ற வேண்டிய கடமை நமது மாகாணத்திற்கு உள்ளது என்றார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers