15 வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன மகளின் இன்றைய நிலையை அறிந்து கதறும் தந்தை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

15 வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன தனது மகள், இன்று சிரியாவில் ஒரு ஐ.எஸ் தீவிரவாதியின் மூன்றாவது மனைவியாக இருப்பதை அறிந்து கண்ணீர் விட்டுள்ளார் ஒரு ஜேர்மன் தந்தை.

Leonora Messing என்ற பெண் 15 வயதாக இருக்கும்போது ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்காக ஜேர்மனியின் Saxony-Anhalt என்ற நகரிலுள்ள தனது வீட்டிலிருந்து ஓடிப்போனார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு ஓடிப்போன Leonora அங்கு Nihad Abu Yasir என்னும் Jihadi Martin Lemkeவை திருமணம் செய்து அவரது இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகியுள்ளார்.

Leonoraவின் தந்தையான Maik Messing (47), தனது மகள் சிரியாவில் இருக்க வேண்டியவள் அல்ல, அவள் ஜேர்மனியில் இருக்கும் தனது குடும்பத்துடன் இருக்க வேண்டியவள் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

ஒருமுறை Messingஐ தொலைபேசியில் அழைத்துள்ள Lemke, Leonora பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் Leonoraவும் தந்தையை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். தனது திருமண நாளில் தனக்கு கிடைத்த தங்க நகைகள் முதல், தனது கணவர் 647 பவுண்டுகளுக்கு ஒரு அடிமையை விலைக்கு வாங்கியது வரை அனைத்தையும் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார் Leonora.

இத்தனைக்கும் பிறகு ஜேர்மன் பொலிசார் சும்மா இருப்பார்களா என்ன, Leonoraவின் தந்தையான Messing வீட்டை சோதனையிட்டதோடு, எந்த அளவுக்கு Leonora ஐ.எஸ் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள் அவர்கள்.

இதற்கிடையில் ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டதையடுத்து Leonora வடகிழக்கு சிரியாவிலுள்ள குர்திஷ் முகாம் ஒன்றில் சிறைவைக்கப்பட்டுள்ளார்.

இருமுறை தப்பியோட முயன்றும் தனது கணவனிடம் சிக்கிக்கொண்டதாக தெரிவித்துள்ள Leonora, ஜேர்மனிக்கு திரும்பி தனது குடும்பத்துடன் இணைந்துகொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளதோடு, தான் செய்தது மிகப்பெரிய தவறு என்பது தனக்குத் தெரியும் என்கிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்