ஜேர்மனில் சந்தேக நபரை சுற்றிவளைத்து சுட்டுவீழ்த்திய பொலிஸார்!

Report Print Vijay Amburore in ஜேர்மனி

போலந்து நாட்டில் காதலியை சுட்டுகொன்றுவிட்டு ஜேர்மனிக்கு தப்பி வந்த நபரை பொலிஸார் நேற்று சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

போலந்து நாட்டை சேர்ந்த கிறிஸ்டினா (26) என்கிற இளம்பெண், தன்னுடைய காதலன் பாவெல் (26) உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதலை முறித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாவெல் கடந்த சில தினங்களுக்கு முன் காதலியின் தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொலை செய்தார். இதுகுறித்து போலந்து பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பில், சந்தேகிக்கும் நபர் கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் ஜேர்மனில் பாவெல் உலா வந்து கொண்டிருந்த காரை, Brandenburg பொலிஸார் கையில் துப்பாக்கியுடன் தடுத்து நிறுத்தி வெளியில் வருமாறு எச்சரித்துள்ளனர். ஆனால் வெளியில் வந்த பாவெல் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பொலிசாரை நோக்கி நீட்டியுள்ளான்.

இதனை பார்த்து அதிர்ந்து போன பொலிஸார், பாவெல்லை சம்பவ இடத்திலேயே சுட்டு வீழ்த்தினர். இந்த நிலையில் கொல்லப்பட்ட நபர் பாவெல் என்பதை போலந்து பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்