ஜேர்மனிக்கு சென்றும் பாரம்பரியத்தை விடாத கேரள மக்கள்: வெளியான புகைப்படங்கள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சொந்த நாட்டைவிட்டு ஜேர்மனிக்கு சென்றபிறகும் பாரம்பரியத்தைவிடாத கேரள மக்கள் ஓணம் கொண்டாடும் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.

கேரளாவில் மத வேறுபாடின்றி பாரம்பரியமாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம் பண்டிகை.

உணவுக்கு வழியில்லை என்றால்கூட, இருக்கும் தானியங்களை விற்றாவது ஓணம் கொண்டாட வேண்டும் என்பார்கள், கேரள மக்களுக்கு அவ்வளவு முக்கியமானது ஓணம் பண்டிகை.

அப்படிப்பட்ட ஒரு பண்டிகையை ஜேர்மனிக்கு சென்ற பின்னரும் சிறப்புடன் கொண்டாடியுள்ளனர் சில கேரள மக்கள்.

மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும், அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்பட்டாராம்.

அப்போது மகாபலி சக்கரவர்த்தி, ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர் கேரள மக்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்