இளம்பெண்ணை துடி துடிக்க கொலை செய்த நபர்.. பல ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த ஜேர்மனி நீதிமன்றம்

Report Print Kabilan in ஜேர்மனி

மொராக்கோவைச் சேர்ந்த நபருக்கு இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில், ஜேர்மன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஜேர்மனியின் Leipzig நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இருந்து Sophia Loesche(28) என்ற மாணவி, தனது குடும்பத்தினரை சந்திக்க Amberg நகருக்கு சென்றுகொண்டிருந்தபோது காணாமல் போனார்.

அவரை காணவில்லை என்று அறிந்த Sophia-வின் பெற்றோர், சமூக வலைதளங்களை பயன்படுத்தி தேடியுள்ளனர். ஆனால், Sophia குறித்த விவரம் தெரியவில்லை. அதன் பின்னர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்பெயினில் சாலை ஓரத்தில் உள்ள சாக்கடை ஒன்றில் இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. Sophia உடலைக் கைப்பற்றிய பொலிசார் நடத்திய விசாரணையில், ஸ்பெயினில் வசித்து வந்த மொராக்கோவைச் சேர்ந்த லொறி ஓட்டுநர் Boujemaa Lamrabat(42) என்பவர் தான் Sophiaவை கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.

பின்னர் அவரை பொலிசார் கைது செய்தனர். இந்த வழக்கினை ஜேர்மனியின் Chemnitz நகர நீதிமன்றம் கைப்பற்றியது.

AFP

Sophia-வை கொலை செய்வதற்கு முன்பு Boujemaa Lamrabat அவரை, வாகன சக்கரத்தை பழுது பார்க்கும் குறடு மூலம் கடுமையாக தாக்கியதாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இதற்கிடையில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வன்முறை இது என்று கூறப்பட்ட நிலையில், Sophiaவின் பெற்றோர் இந்த வழக்கை பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒன்றாக கருத வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தினர்.

இந்நிலையில், Boujemaa Lamrabat மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜேர்மனி நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்