ஜேர்மன் மருத்துவமனையில் பயங்கர தீ: ஆக்சிஜன் குழாயால் மோசமான நிலைமை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் மருத்துவமனை ஒன்றில் திடீரென தீப்பற்றியதையடுத்து ஒருவர் உயிரிழந்ததோடு, 72 நோயாளிகளுக்கு காயம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜேர்மனியில் உள்ள Pempelfort மாகாணத்தில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் திடீரென தீப்பற்றியது.

மருத்துவமனையின் இரண்டாவது தளத்திலுள்ள ஒரு அறையில் தீப்பற்றியதில், அங்கிருந்த 77 வயது நோயாளி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் 72 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் 61 நோயாளிகள் புகையை சுவாசித்ததால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

அவர்களில் 11 பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்தே சிகிச்சையளிக்கப்பட்டது.

19 பேர் அருகிலுள்ள வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதோடு, ஒருவர் ஹெலிகொப்டர் மூலம் Aachenஇலுள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மற்றவர்களுக்கு, அதே மருத்துவமனையிலுள்ள வேறு கட்டிடங்களில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீப்பற்றி எரியும்போது அங்கிருந்த ஆக்சிஜன் குழாய் ஒன்று சேதமடைந்ததையடுத்து நிலைமை மோசமானது.

தீப்பற்றியதற்கான காரணம் தெரியாத நிலையில், பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்