திடீரென ஜேர்மனியில் தரையிறங்கிய பிரதமர் மோடியின் விமானம்!

Report Print Kabilan in ஜேர்மனி

இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும் வழியில், ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரில் தரையிறங்கினார்.

அரசு முறைப் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று இரவு டெல்லியில் இருந்து மோடி விமானத்தில் புறப்பட்டார்.

அப்போது வழியில் விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக ஜேர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

அங்கு 2 மணிநேரம் அவரது விமானம் நிறுத்தப்பட்டது. அப்போது தரையிறங்கிய மோடியை, ஜேர்மனின் இந்திய தூதர் முக்தா தோமர், தூதரக அதிகாரி பிரதிபா பார்க்கர் ஆகியோர் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, ஜேர்மனியில் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அவரது விமானம் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்குப் புறப்பட்டுச் செல்கிறது.

இந்நிலையில், அமெரிக்கா செல்லும் மோடி அந்நாட்டு ஜனாதிபதி டிரம்பை, டெக்ஸ்சாஸ் நிகழ்ச்சியில் சந்திக்கிறார். இதில் இந்திய வம்சாவளியினர் 50 ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்