ஜேர்மனியில் 4,300 பேரின் வேலைக்கு உலை வைக்க திட்டமிட்டுள்ள வங்கி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் பிரபல வங்கி ஒன்று, 4,300 பேரின் வேலைக்கு உலை வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் இரண்டாவது பெரிய வங்கியான Commerzbank, சுமார் 4,300 முழு நேர பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப இருப்பதோடு ,200 கிளைகளை மூட முடிவு செய்துள்ளதாகவும் நேற்று அறிவித்துள்ளது.

தனது திட்டங்களை செயல்படுத்துவதற்காக தனது ஷேர்கள் சிலவற்றையும் விற்க இருப்பதாக தெரிவித்துள்ளது அந்த வங்கி.

சமீபத்தில், Commerzbankஇன் போட்டியாளரான Deutsche வங்கி, 20,000 பேரையும், HSBC வங்கி 4,000 பேரையும், பிரான்சின் Societe Generale வங்கி 1,600 பேரையும் வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Commerzbankஇன் ஷேர்கள் இந்த ஆண்டு தடுமாற்றத்தை சந்தித்த நிலையில், Deutsche வங்கியும் Commerzbankம் இணைய திட்டமிட்ட ஒரு முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

அவை இரண்டும் இணைவதால், இன்னும் நிலைமை மோசமாகும் என யூனியன்கள் மறுப்பு தெரிவித்ததையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்