என் கனவுகளை திருடிவிட்டீர்கள்.. உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த சிறுமி கிரேட்டாவை சந்தித்த ஏஞ்சலா மெர்க்கல்!

Report Print Kabilan in ஜேர்மனி

ஐக்கிய நாடுகள் அவையில் உலக தலைவர்களை விளாசிய சிறுமி கிரேட்டாவை, ஜேர்மனியின் சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் சந்தித்து பேசினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 74வது பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலரான 16 வயது சிறுமி கிரேட்டா, உலக தலைவர்களை கடுமையாக விளாசினார்.

தன்னுடைய கனவுகளையும், குழந்தை பருவத்தையும் வெற்று வார்த்தைகளால் திருடி விட்டீர்கள் என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும், நாம் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகு பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என கடுமையாக தாக்கி பேசினார்.

சிறுமியின் இந்த பேச்சினைத் தொடர்ந்து உலக நாடுகளின் கவனம் அவர் பக்கம் திரும்பியுள்ளது. அவர் கேட்ட How dare you என்ற கேள்வி ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், மாநாட்டின் இடையே ஜேர்மனியின் சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல், சிறுமி கிரேட்டாவுடன் ஒன்றாக அமர்ந்து பேசினார்.

இருவரும் சோபாவில் அருகில் அமர்ந்து பேசும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக ஏஞ்சலா மெர்க்கல் பேசும்போது, ‘விழித்தெழுந்த அனைத்து இளைஞர்களின் குரலையும் நாம் கேட்டுவிட்டோம்’ என கிரேட்டாவின் உரையை குறிப்பிட்டு பேசினார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்