கார் விபத்தில் பலியான மாமியார்.. கைதான பிரபலம் கூறிய விடயம்: இறுகும் விசாரணை

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியில் மாமியார் கார் விபத்தில் பலியான வழக்கில், சம்பவ இடத்திலிருந்து தப்பியதாக தொலைக்காட்சி பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் Nuremberg நகரின் அருகே A3 motorway பகுதியில், மூன்று கார் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 75 வயது மதிக்கத்தக்க பெண்ணும், கார் ஓட்டுநரும் பலியாகினர்.

குறித்த பெண் தொலைக்காட்சி பிரபலம் Ralf L(53) என்பவரின் மாமியார் ஆவார். அத்துடன் விபத்து நடந்த இடத்தில் மோதிக்கொண்ட மற்றொரு காரில், Ralf L தனது மனைவியுடன் வந்துள்ளார்.

இந்த சம்பவத்தின்போது பிரபலத்தின் மனைவி காரிலிருந்து வேகமாக வெளியேறி சென்றபோது, வேறொரு கார் மோதி காயமடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவிட்டு, ஹொட்டல் ஒன்றுக்கு சென்று தங்கியுள்ளனர்.

இதற்கிடையில், இந்த சம்பவத்தை நேரில் பார்த்த உள்துறை அமைச்சர் Joachim Herrmann தனது காரை உடனே நிறுத்தி, விபத்தில் சிக்கிய பெண்ணை காரில் இருந்து வெளியே மீட்டுள்ளார். அத்துடன் அவசரகால உதவியையும் அழைத்துள்ளார்.

இந்நிலையில், ஹொட்டலில் தங்கியிருந்த தொலைக்காட்சி பிரபலம் Ralf Lஐ பொலிசார் கைது செய்தனர். அவரிடம் பொலிசார் விசாரித்தபோது செல்லப்பிராணிகள் குறித்து ஆவணப்படம் எடுப்பதற்காக ஹொட்டல் அறை எடுத்து தங்கியதாக தெரிவித்தார்.

ஆனால், சௌவுத்தர்ன் ஜேர்மனிக்கு விடுமுறையை கழிக்க அவர்கள் சென்றதாக, Ralf Lயின் பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ள முயன்றபோது அவர் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்