வாடகை வீட்டில் வசிப்போருக்கு உதவுவதற்காக ஒரு பில்லியன் யூரோக்கள் செலவிடும் பெர்லின்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் வீட்டு வாடகை கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகரித்து வருவதால், மக்கள் அதற்கெதிராக பேரணிகள் நடத்தும் அளவுக்கு இறங்கிவிட்டார்கள்.

எனவே சமீபத்தில் வீட்டு வாடகையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெர்லின் நகராட்சி ஒரு பில்லியன் யூரோக்கள் செலவில் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

வியாழனன்று அறிவிக்கப்பட்ட அந்த திட்டத்தின்படி, சமூக இல்லங்கள் திட்டத்தின் கீழ் 1960 முதல் 1990 வரை கட்டப்பட்ட வீடுகளை அரசே வாங்கிக்கொள்வது என முடிவு செய்துள்ளது.

பெர்லினில் வீட்டு வாடகையை நிலையாக வைப்பதற்காக இந்த திட்டம் முன்வைக்கபட்டுள்ளதாக மேயர் Michael Müller தெரிவித்துள்ளார். இதனால் 10,000க்கும் அதிகமான வாடகை வீடுகளில் குடியிருப்போர் பயன்பெறுவார்கள்.

ஆனால், வலது சாரிக்கட்சிகள் இது பணத்தை வீணாக்கும் செயல் என விமர்சித்துள்ளன.

Photo: DPA

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்