ஜேர்மன் எல்லைகளில் பொலிசார் குவிப்பு: புலம்பெயர்வோரை தடுக்க நடவடிக்கை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு புலம்பெயர்வோர் நுழைவதை தடுக்கும் முயற்சியாக ஜேர்மன் எல்லையில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜேர்மன் உள்துறை அமைச்சரான Horst Seehofer, ஜேர்மன் எல்லைகளில், எல்லை சோதனைகளை அதிகரிக்க முடிவு செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய விரும்பும் புலம்பெயர்வோருக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது.

அவர் திட்டமிட்டிருப்பதாகத்தான் சொன்னார், ஆனால் அதற்குள் எல்லைகளில் பொலிசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இரண்டாம் நிலை புலம்பெயர்தல் எனப்படும் ’secondary migration’ஐ தடுப்பதற்காகவே இந்த அதிரடி.

’secondary migration’ என்பது, ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஒன்றிற்குள் புலம்பெயந்து வந்துள்ளவர்கள், அந்த நாட்டிலிருந்து மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஒன்றிற்குள் புலம்பெயர்வதாகும்.

ஆனால் Horst Seehoferஇன் நடவடிக்கைகளுக்கு பிற கட்சியினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்