சர்க்கஸிலிருந்து தப்பிய வரிக்குதிரைக்கு நேர்ந்த சோகம்: கொதிக்கும் மக்கள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சர்க்கஸ் ஒன்றிலிருந்து தப்பிய வரிக்குதிரைகளில் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதால் சுட்டுக்கொல்லப்பட்டது.

ஜேர்மனியின் Tessin என்ற நகரில் சர்க்கஸ் குழு ஒன்று முகாமிட்டிருந்தது. அப்போது சர்க்கஸிலிருந்து இரண்டு வரிக்குதிரைகள் தப்பியோடிவிட்டன.

அவற்றில் ஒரு வரிக்குதிரை பிடிபட்டுவிட்ட நிலையில், Pumba என்ற இரண்டாவது வரிக்குதிரை நெடுஞ்சாலையில் ஓட ஆரம்பித்தது.

இதனால் வரிக்குதிரை மீது மோதாமல் தவிர்க்க முயன்ற இரண்டு கார்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதி விபத்து ஒன்று ஏற்பட்டது.

இந்த விபத்தில் கார்களின் சாரதிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லையென்றாலும், வரிக்குதிரையை கையால் பிடிக்க முயன்ற ஒரு பொலிஸ் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டது. கார் ஒன்றின் மீது Pumba ஏறி ஓடியதால் ஒரு காருக்கு சேதம் ஏற்பட்டது.

வெகு நேரம் போராடியும் Pumbaவை பிடிக்க முடியாததால், ஒரு அதிகாரி அதை தன்னுடைய துப்பாக்கியால் சுட்டு விட்டார். Pumba அங்கேயே உயிரிழந்துவிட்டது.

இதையறிந்த மக்கள் பலரும் கோபமடைந்துள்ளனர். மயக்க ஊசி ஒன்றை செலுத்தி சுட்டுக்கொல்லவேண்டும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சர்க்கஸ் கம்பெனியின் உரிமையாளர்களும், தங்கள் வரிக்குதிரையை சுட்டுக்கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோர இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்