துருக்கிக்கு உதவ ஜேர்மனி தயாராக இருக்கிறது! உள்துறை அமைச்சர்

Report Print Kabilan in ஜேர்மனி

துருக்கி நாட்டில் இருந்து சட்டவிரோதமாக பலர் வெளியேறுவதைத் தடுக்கும் விடயத்தில், ஜேர்மனி உதவுவதற்கு தயாராக இருப்பதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமையன்று, துருக்கியில் இருந்து கடல் வழியாக ஏராளமானோர் கிரீஸ் நாட்டிற்கு வருகை புரிவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாட்டைச் சேர்ந்த குடும்பங்கள் என்றும் UNHCR தெரிவித்தது. அத்துடன் செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 10,258 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டது.

இந்த எண்ணிக்கை கடந்த 2016ஆம் ஆண்டு துருக்கிக்கும், ஐ.நாவுக்கும் இடையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஐரோப்பிய ஒன்றிய இடம்பெயர்வு ஆணையர் Dimitris Avramopoulos, துருக்கியில் இருந்து அதிகளவில் சட்டவிரோதமாக வெளியேறுவதை தடுக்க அவசர தேவை இருப்பதாக தெரிவித்தார்.

EPA

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கடந்த வாரங்கள் மற்றும் மாதங்களில் இதுபோன்ற ஒழுங்கற்ற வருகை கிரீஸ் நாட்டில் அதிகரித்துள்ளது. துருக்கியில் இருந்து ஒழுங்கற்ற முறையில் வெளியேறுவதைத் தடுப்பதையும், கண்டறிவதையும் மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது’ என தெரிவித்தார்.

இந்நிலையில் தான், ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் Horst Seehofer மற்றும் ஐரோப்பிய ஒன்றிய இடம்பெயர்வு ஆணையர் Dimitris Avramopoulos இருவரும், வரும் வெள்ளிக்கிழமை அன்று கிரீஸ் நாட்டிற்கு செல்ல உள்ளனர்.

இந்த பயணம் குறித்து பேசிய ஜேர்மன் உள்துறை அமைச்சர் Seehofer, ‘எங்கிருந்தாலும் துருக்கிக்கு ஒரு பங்களிப்பை நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்