ஆண்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள ரகசிய நடவடிக்கைகள் எடுத்த பெண்கள்: அக்டோபர் விழாவின் கருப்பு முகம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

அக்டோபர் விழா என்று அழைக்கப்படும் பிரபல ஜேர்மன் பண்டிகை ஒன்றின்போது, தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக சில ரகசிய நடவடிக்கைகளை பெண்கள் எடுத்துக்கொண்டதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் பவேரிய தலைநகரான முனிச்சில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பிரபல விழா Oktoberfest.

பியரும், வாத்திய பேரணிகளும், பார்ட்டிகளுமாக களைகட்டும் இந்த பண்டிகைகளின்போது, கவர்ச்சியான பாரம்பரிய உடை ஒன்றை அணிந்து, அழகிய இளம்பெண்கள் பியர் விநியோகிப்பதுண்டு.

ஒரு பக்கம் கூத்தும் கும்மாளமுமாக கொண்டாடப்படும் பண்டிகையின்போது, கவர்ச்சியாக உடை அணிந்த இளம்பெண்கள் நடமாடினால் என்னத்துக்காவது? கூட்டத்தை சாக்காக வைத்துக்கொண்டு பெண்களின் உடைக்குள் கைவிடும் ஆண்களும், பின்பக்கங்களை பிடிக்கும் ஆண்களும் இருக்கத்தானே செய்வார்கள்!

இம்முறை இதையெல்லாம் சமாளிக்க தில திட்டங்களை கடைப்பிடித்திருக்கிறார்கள் பியர் விநியோகிக்கும் இளம்பெண்கள்.

ஆம்! இளம்பெண் ஒருவர், தாங்கள் கவர்ச்சிகரமான பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டதோடு, சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்பவர்கள் அணியும் ஒருவித கடினமான கால்சட்டைகளை அணிந்துகொண்டதாக தெரிவிக்கிறார்.

எல்லாம் தவறாக தொடுபவர்களிடமிருந்து தப்புவதற்காகத்தான் என்கிறார் அவர். அத்துடன் இம்முறை இன்னொரு விடயத்தையும் பின்பற்றினார்களாம் இந்த இளம்பெண்கள்... அது, அடர் சிவப்பு வண்ணத்தில் உதட்டுச்சாயம் அணிந்துகொள்வது...

ஆம்! ஆண்களில் பெரும்பாலானோருக்கு சிவப்பு உதட்டுச்சாயம் பிடிக்காதாம். கூட்டத்தில் பெண்களை தவறாக தொடுவது, பக்கத்தில் அமரும் பெண்ணுக்குமுத்தமிடுவது, பூ விற்கும் பெண்ணின் கன்னத்தை வருடுவது என நிறைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கும் இடத்தில் இவை தங்களை கொஞ்சம் பாதுகாத்துக்கொள்ள உதவும் என்று நம்புகிறார்கள் அந்த பெண்கள்.

2017இல் இந்த Oktoberfest பண்டிகைக்காலத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. 2018-ல் அது 45ஆகக் குறைந்தது.

இம்முறை முனிச் பொலிசார், மூன்று வன்புணர்வு வழக்குகள் உட்பட, 25 பாலியல் தாக்குதல்களை பதிவு செய்துள்ளதைப் பார்க்கும்போது, இம்முறை இந்த பியர் விநியோகிக்கும் பெண்களின் நடவடிக்கைகளுக்கு பலன் இருப்பது போலத்தான் தெரிகிறது, அத்துடன் இந்த எண்ணிக்கை குறைவுக்கு MeToo இயக்கமும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்