மசூதிகள், புலம்பெயர்தல் அலுவலகங்களுக்கு வந்த மிரட்டல்: ரெய்டில் இறங்கிய அதிகாரிகள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

மசூதிகள், அரசியல் கட்சி அலுவலகங்கள், ஊடக அலுவலகங்கள் மற்றும் புலம்பெயர்தல் அலுவலகங்களுக்கு வலது சாரியினர் அச்சுறுத்தல் இமெயில்கள் அனுப்பியதையடுத்து, ஜேர்மன் அதிகாரிகள் ரெய்டுகளில் இறங்கினர்.

தென்மேற்கு ஜேர்மன் பகுதி மற்றும் பிற மூன்று மாகாணங்களில் அமைந்துள்ள ஏழு கட்டிடங்களில் இன்று சோதனை மேற்கொண்டதாக பவேரியாவின் மாகாண குற்றவியல் பொலிஸ் அலுவலகம் தெரிவித்தது.

யூலை மாதத்தில் இரண்டு வாரங்களாக, ஜேர்மனி முழுவதும் 23 பேருக்கு, வெடிகுண்டு மிரட்டல் உட்பட, அச்சுறுத்தல் இமெயில்கள் அனுப்பப்பட்டன.

இமெயில்களின் அனுப்புநர் முகவரியில், ’People's Front,’ 'Combat 18’ அல்லது ‘Blood and Honor’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மிரட்டல் சம்பவங்கள் தொடர்பாக ஏழு பேர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு தற்காலிகமாக காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக பவேரியாவின் உள்துறை அமைச்சர் Joachim Herrmann தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்