ஜேர்மனியை உலுக்கிய இளம்பெண் கொலை... சிறைக்குள் அகதி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மானிய இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த அகதி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அப்துல் மொபின் என அறியப்பட்ட அந்த இளைஞருக்கு நீதிமன்றம் எட்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

Schifferstadt நகரில் அமைந்துள்ள சிறார்களுக்கான சிறையிலேயே வியாழனன்று அப்துல் மொபினின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் Kandel நகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி தமது காதலை முறித்துக் கொண்டதற்காக 15 வயதேயான மியா என்ற இளம்பெண்ணை அப்துல் மொபின் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார்.

பொதுமக்கள் கண் முன்னே நடந்த இந்த கொலை சம்பவத்தை அடுத்து, அப்துல் மொபினை அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைதான பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மொபின் தமக்கு 15 வயது என குறிப்பிட்டுள்ளார். ஆனால் நிபுணர்கள் அதை ஒப்புக்கொள்ள மறுத்ததுடன், அவருக்கு 17 முதல் 20 வயது இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு ஜேர்மனியின் Hesse மாகாணத்தில் அகதியாக நுழைந்த மொபின் புகலிட கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஆனால் 2017 பிப்ரவரி மாதம் அவரது புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன், உடனடியாக வெளியேற்றாமல் அவகாசம் அளித்துள்ளனர்.

இதனிடையே மியாவுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து வந்த மொபின் அதமூலம் ஜேர்மானிய குடிமகனாக திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

பல மாத காலம் அந்த உறவு நீடித்ததாகவும், மொபினின் உண்மை முகம் அறிந்த மியா மொபினுடனான காதலை முறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த மொபின் மியாவை கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன்,

அகதிகள் தொடர்பான ஜேர்மானிய அரசின் கொள்கைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வழிவகுத்தது இந்த கொலைச் சம்பவம்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்