சிரியா மீதான தாக்குதல்.... துருக்கி ஜனாதிபதியிடம் வலியுறுத்திய ஏஞ்சலா மெர்கல்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

சிரியா மீதான தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று துருக்கி அதிபரிடம் ஜேர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்கல் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

இதன் காரணமாக சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்திஷ் போராளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பலியாகி வருகின்றனர்.

துருக்கியின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில், துருக்கியின் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், துருக்கி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஜேர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்கல், உடனடியாக சிரியா மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என துருக்கி ஜனாதிபதி எர்டோகனிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நடடிவக்கையால் ஏராளமான மக்கள் தங்களுடைய குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள மெர்கல், பிராந்தியத்தின் ஸ்திரமின்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

மட்டுமின்றி ஐஎஸ் பயங்கரவாதிகள் மீண்டும் எழுச்சி பெற வழிவகுக்கும் எனவும் வலியுறுத்தியதாக அவரது அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்