சொத்து போய் விடுமோ என்ற பயத்தில் சொந்த தாயை கிணற்றில் மூழ்கடித்து கொன்ற மகன்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
225Shares

பாரம்பரிய சொத்து தனக்கு கிடைக்காமல்போய் விடுமோ என்ற பயத்தில், சொந்த தாயையே கொலை செய்துள்ளார் ஒருவர்.

Neuenkirchen என்ற பகுதியை சேர்ந்த 55 வயது நபர், தனக்கு வரவேண்டிய சொத்துக்களை விற்க முயன்ற தாயை, கிணற்றுக்குள் வீசி கொலை செய்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட அந்த பெண்மணியின் உடல், உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உடற்கூறு ஆய்வில், அந்த 79 வயது பெண்மணி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்ததோடு, அவரது தலையில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்களும் இருந்தது தெரியவந்தது.

எனவே சொத்து தொடர்பான வாக்குவாதத்தின்போது, அவர் தனது தாயை தாக்கி, கிணற்றுக்குள் தூக்கி விசியிருக்கலாம் என கருதப்படுகிறது.

தனக்கு வரவேண்டிய சொத்து கை நழுவி விடக்கூடாது என்ற அச்சத்தில் தனது தாயை அந்த நபர் கொலை செய்துள்ளார் என்று விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தனது தாயை கிணற்றில் மூழ்கடித்து கொலை செய்ததாக அந்த ஜேர்மானியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்