10 வயது சிறுவனுக்கு வந்த பார்சல்: திறந்தவருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில், தனக்கு வந்த பார்சலை திறந்து பார்த்த ஒரு சிறுவன், அதிர்ச்சியில் நடுநடுங்கிப்போனான்.

ஜேர்மன் சிறுவன் ஒருவனுக்கு இறந்த தேள்களை பதப்படுத்தி ரசாயனம் ஒன்றிற்குள் போட்டு உறைய வைத்து சேகரிப்பது ஒரு பொழுதுபோக்கு.

சமீபத்தில் ஒரு தேளைக் குறித்து அறிந்த அவன், தன் தாயிடம் அதை வாங்குமாறு கூறியுள்ளான்.

அந்த பெண்மணி இணையத்தில் தேடி அந்த தேளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். ஆனால், இறந்த தேளுக்கு பதிலாக அவர் உயிருள்ள தேளுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டார்.

பார்சல் வந்து சேர்ந்திருக்கிறது. ஆவலுடம் பையன் பார்சலைத் திறக்க, அவனது தாயும் உடன் இருந்திருக்கிறார். பார்சலுக்குள், உயிருள்ள கடும் விஷத்தன்மை வாய்ந்த தேள் ஒன்று உயிருடன் இருப்பதைக் கண்டு நடுங்கிப் போயிருக்கின்றனர் இருவரும்.

கொட்டினால் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது அந்த Androctonus australis என்ற வகை தேள்.

உடனடியாக, ஊர்வன பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுத்துவிட்டு இருவரும் காத்திருக்க, அவர்கள் வந்து பாதுகாப்பான முறையில் தேளை எடுத்துக்கொண்டு சென்றிருக்கின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்