பிறந்தநாளைக் கொண்டாட கனடா வந்த ஜேர்மன் சுற்றுலாப்பயணி: வாழ்வே மாறிப்போன சோகம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் கனடா வந்த சுற்றுலாப்பயணி ஒருவர் கனடா இளைஞர் ஒருவரால் சுடப்பட்டதால் அவரது வாழ்வே மாறிப்போனது.

ஜேர்மனியைச் சேர்ந்த Horst Stewin தனது வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போது, யாரென்றே தெரியாத ஒரு நபர் அவரை தலையில் துப்பாக்கியால் சுட்டார். பின்னர், சுட்டவர் ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த 16 வயதுடைய ஒரு இளைஞர் என்பது தெரியவந்தது.

சம்பவம் நடந்தபோது அவருக்கு 16 வயது என்பதால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

Horst Stewin தனது காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, அவர்களை தாண்டி ஒரு கார் சென்றிருக்கிறது. அதில் பல இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள்.

Court exhibit

அவர்களில் ஒருவர்தான் Horst Stewinஐ துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். உண்மையில் வேறு யாரோ ஒருவருக்கு குறி வைத்திருந்த அந்த இளைஞர், அவர் என்று தவறுதலாக எண்ணி Horst Stewinஐ சுட்டிருக்கிறார்.

துப்பாக்கியால் சுடப்பட்டதில் Horst Stewin நிலை தடுமாற, அவர் ஓட்டிய கார் மரம் ஒன்றில் சென்று மோதியிருக்கிறது.

அவரது தலையிலிருந்து எட்டு குண்டு துகள்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ளன.

61 வயதாகும் Stewin உயிர் பிழைத்துவிட்டாலும், அவர் வாழ்நாள் முழுவதும் அந்த கோர சம்பவத்தின் பாதிப்புகளை சுமக்கவேண்டியிருக்கும்.

தற்போது அவரது உடலின் வலது பக்கம் செயலிழந்துள்ளதோடு, பேசுவதற்கும் தடுமாறுகிறார் Stewin. இந்த வழக்கில் பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Court exhibit

Court exhibit

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்