ஓடும் ரயிலில் பயங்கர தீ.. கொழுந்து விட்டெரிந்து சாம்பலான பெட்டி: உயிருக்கு போராடிய வீடியோ

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் ஓடும் ரயில் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் பெர்லினில் உள்ள Bellevue நிலையத்திலே இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

Bundesliga கால்பந்து தொடரில் எஃப்சி யூனியன் பெர்லினுடனான போட்டியில் SC Freiburg அணி 2-0 என கோல் கணக்கில் தோல்வியடைந்தது. நாட்டின் தென்மேற்கில் நடந்த போட்டியை காண SC Freiburg ஆதரவாளர்களுக்கு சிறப்பு ரயில் சேவை விடப்பட்டுள்ளது.

போட்டிக்கு பின் SC Freiburg ஆதரவாளர்கள் ரயில் வீடு திரும்பிக்கொண்டிருந்து போது திடீரென ரயில் தீ பிடித்து கொழுந்து விட்டெரிந்துள்ளது. ரயிலுக்குள் சிக்கிய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உயிர் பயத்தில் கூச்சலிட்டுள்ளனர்.

பின்னர், அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், ரயிலின் ஒரு பெட்டி முழுவதம் எரிந்து சாம்பலாகியுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே ரயில் தீ பிடித்ததாக ஜேர்மனி பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, Bellevue நிலையம் வழியாக செல்லும் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்